தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய விசேட பூஜை வழிபாடுகள்.
தைப்பொங்கலை முன்னிட்டு மட்டக்களப்பில் சகல இந்து ஆலயங்களிலும் இயற்கை தெய்வமாகிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பட்டன. இந்நிலையில் மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கணேசரிவிஷாந்த குருக்கள் தலைமையில் திங்கட்கிழமை(15.01.2024) காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழையுடனான காலநிலை ஓய்ந்துள்ள பின்னர் தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இந்து ஆலயங்களிலும் வியாபார நிலையங்களிலும், வீடுகளிலும், சூரிய பகவானுக்கு நன்றி கடன் செலுத்தும் தைத்திருநாள் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம் பெற்றன.
இதேவேளை மட்டக்களப்பு புளியந்தீவு ஆலயம் அலங்கரிக்கப்பட்டு நெற்கதிர்கள் தொங்கவிடப்பட்டு முதலில் சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு முதலில் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றதைத் தொடர்ந்து, கருவறையில் வீற்றிருக்கும் சித்தி விநாயகர் பெருமானுக்கும், தைத்திருநாள் விசேட வழிபாடுகள் இடம் பெற்றன. இன்றைய இந்த விசேட வழிபாடுகளில் நகரின் அதிகளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டு சூரிய பகவானின் நல்லாசிகளை பெற்றுக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment