22 Jan 2024

கிழக்கு மாகாண கட்டிட ஒப்பந்தக்காரர்கள் எதிர்நோக்கும், பிரச்சனைகளுக்குரிய தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளிப்பு.

SHARE

கிழக்கு மாகாண கட்டிட ஒப்பந்தக்காரர்கள் எதிர்நோக்கும், பிரச்சனைகளுக்குரிய தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளிப்பு.

ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாண கட்டிட ஒப்பந்தக்காரர்கள்   எதிர்நோக்கும், பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை பெற்றுத் தருவதாக இலங்கை கட்டிட நிர்மாண சங்கத்தின் தலைமைச் செயலக தவிசாளர் டாட்டரின் டோன் போல் தெரிவிப்பு

நாட்டின்  கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று காரணமாக இலங்கை கட்டிட நிர்மாண சங்கத்தில் உள்ள கட்டிட ஒப்பந்தகாரர்கள் கடந்த காலங்களில் எதிர்நோக்கி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள கட்டிட ஒப்பந்தக்காரர்கள்  எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்  சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, இலங்கை கட்டிட நிர்மாண சங்கத்தின் தலைமைச் செயலக தவிசாளர் டாட்டரின்  டோன் போல் ஞாயிற்றுக்கிழமை (21.01.2024) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண ஒப்பந்தக்காரர்களின் பிரச்சினைகளை பற்றி கேட்டு அறிந்து கொண்டதுடன் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதியுடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தனியார் விடுதியில் இடம் பெற்ற இந்த விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட கட்டிட நிர்மாண சங்கத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இடம்பெற்றபோது பொருளாதார நெருக்கடியின் போது கட்டிட நிர்மாண பொருட்களின் விலையேற்றம் காரணமாக தாம்  பாதிக்கப்பட்டதாகவும், எரிபொருள் விலையேற்றம் மாவட்டத்தில் ஏற்படும் தொடர்ச்சியான வெள்ள அனர்த்தம் போன்ற பல காரணங்களினால் தங்களது கட்டிடப் பணிகள் பாதிப்படைந்துள்ளதாகவும், இவற்றைக் கருத்தில் கொண்டு இலங்கை கட்டிட நிர்மாண சங்கம் தமக்குரிய தீர்வுகளைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் தமது கோரிக்கைகளை இங்கு முன்வைத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட இலங்கை கட்டிட நிர்மாண சங்கத்தின் தவிசாளர் எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்திற்கு மாதம் ஒரு தடவை  வருகை தந்து துரிதமான தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகவும், ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாண கட்டிட ஒப்பந்தக்காரர்கள் எதிர்நோக்கும், பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.









SHARE

Author: verified_user

0 Comments: