மட்டக்களப்பில் 10000பேர் வேலை செய்யக்கூடிய தொழிற்சாலை உருவாக்கும் - இராஜாங்க அமைச்சர் வியழேந்திரன் தெரிவிப்பு.
நாம் மட்டக்களப்பு மாவட்டத்திலே 10000 பேர் வேலை செய்யக்கூடிய தொழிற்சாலையை உருவாக்கும் நோக்குடம் தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமது குடும்பத்தினரோடு இம்மாவட்ட மக்கள் இம்மாவட்டத்திலே வாழவேண்டும்.என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் கிழக்கு பகுதியில் அமைக்கப்படவுள்ள வீதி அபிவிருத்திகளைப் பணிகளை வியாழக்கிழமை(18.01.2024)இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பார்வையிட்டார். இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மக்கள் இராஜாங்க அமைச்சரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். செப்பனிடப்படவுள்ள வீதிகளைப் பார்வையிட்ட பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
தற்போது இறைவனுடைய அருளாலும், அரசாங்கம் முன்நெடுத்துள்ள காத்திரமான நடவடிக்கைகளாலும் பொருளாதாரம் படிப்படியாக மீழெழுற்சி கண்டு வருகின்றது. இவ்வாறான இக்கட்டான சூழலில், நிதியைக் கொண்டு வந்து அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்படுத்துவதென்பது சாதாரண விடையம் அல்ல. ஆனாலும் பலர் விமர்சனங்களை முன்வைக்கலாம் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார். ஆனால் விசமத்தனங்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இதனால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை.
எம்மைப் பொறுத்தளவில் எமக்கு வாக்களித்த மக்களுக்கும், எம்மை நம்பிய மக்களுக்கும், ஏதாவது நல்ல விடையம் செய்ய வேண்டும். என்ற நோக்குடன்தான் நாம் இரவு பகலாக வேலை செய்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே 36000 விதவைத் தாய்மார்கள் உள்ளார்கள், 8000 மாற்றுத் திறனாளிகள் உள்ளர்கள், 25000 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளார்கள், 8000 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளார்கள், இவ்வாறான நிலையில் இம்மாவட்டத்தில் எந்த தொழிற்சாலையையும் உருவாக்கவில்லை.
நாம் மட்டக்களப்பு மாவட்டத்திலே 10000 பேர் வேலை செய்யக்கூடிய தொழிற்சாலையை உருவாக்கும் நோக்குடம் தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமது குடும்பத்தினரோடு இம்மாவட்ட மக்கள் இம்மாவட்டத்திலே வாழவேண்டும்.
நாம் உரிமைக்காகவும், அபிவிருத்திக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எமக்கு இரண்டும் தேவை. நாம் புதினம் பார்ப்பதற்கு வரவில்லை. எனவே எமக்கு உரிமையும் தேவை, அபிவிருத்தியும் தேவை என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மக்களுக்கு கௌரவமான வாழ்க்கையை நாம் உருவாக்க வேண்டும்.
பிச்சைக்காரர்களின் புண் போல ஒரே பிரச்சனையை வைத்துக் கொண்டு கதைத்துக் கொண்டிருக்க முடியாது. பிச்சைக்கான் பிச்சையக் காட்டி புண் எடுப்பான், மாறாக சிலர் தமிழர்களின் பிரச்சனையைக் காட்டி வாக்கெடுக்கின்றார்கள். இறுதியில் ஒன்றும் நடைபெறப்போவதில்லை. எம்மைப் பொறுத்தவலையில் எமது சமூகத்திற்கு எம்மால் முடிந்த சேவையைச் செய்யவேண்டும் என்பதுதான் எமது நோக்குமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment