எமது சமூகத்தினை கரைசேர்க்கின்ற ஆயுதம் கல்வியே - பிரசாந்தன்.
எமது சமூகம் நம்பியிருப்பது கல்வி எனும் ஆயுதத்தினை மாத்திரம் தான் கல்வியினூடாகவே எமது சமூகத்தினை வழிநடத்த முடியும் கல்வியில் மாணவர்களை கரைசேர்க்கின்ற ஒட்டுமொத்த பொறுப்பும் அதிபர்; ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்.ககு.புதிய கொலணி சிவவித்தியாலயம் பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற்ற மாணவியை கௌரவிக்கும் முகமாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டின் கீழ் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கும் நிகழ்வில் வெள்ளிக்கிழமை (22.12.2023) கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… தனது பாடசாலை மாணவி சித்தியடைந்ததனை பெருமையாக நினைத்து ஒவ்வொரு இடங்களிலும் சென்று இந்த மாணவிக்கு உதவி பெற்றுக்கொடுக்க வேண்டும் கௌரவிப்பை செய்யவேண்டும் என்பதில் அதிபர் செயற்படுவது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். தனது பிள்ளை சித்திபெற்றால் எவ்வாறு பூரிப்படைவார்களோ அதே போன்று இந்த பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் இவ்வளவு சிறப்பாக சிரத்தையுடன் செயற்படுவது பாராட்டத்தக்கது. மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் நம்பியிருப்பது பாடசாலைகளையேயாகும். மாணவர்கள் பெற்றோர்களுடன் இருப்பதை விட பாடசாலையிலே அதிக நேரம் செலவிடுகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென செய்தியொன்றினை பார்க்கக்கூடியதாக இருந்தது.
ஆகவே இதையெல்லாம் நிறுத்துவேண்டுமாக இருந்தால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அதேபோன்று பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாணவர்களின் இளமை பருவத்தினை மிக சிறப்பாக வழிநடத்தக்கூடிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டு செயற்படுத்த வேண்டும்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைக்காக கட்சி நிதியில் இருந்தும் தனது சொந்த நிதியிலிருந்தும் கிட்டத்தட்ட 57 இலட்சம் ரூபாயினை கற்றல் செயற்பாடுகளுக்காக செலவுசெய்து வருகின்றார். அதனடிப்படையில் இம்முறையும் நாங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் வறுமையுடன் போராடிக்கொண்டிருக்கின்ற முன்னாள் போராளிகளின் பிள்ளைகள் என அனைத்து மாணவர்களின் விபரங்களும் திரட்டப்பட்டு அவர்களுக்கான பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் துவிச்சக்கரவண்டிகள் வழங்குவதற்கான செயற்பாடுகள் எமது கல்வி கலை கலாசார பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எமது சமூகம் நம்பியிருப்பது கல்வி எனும் ஆயுதத்தினை மாத்திரம் தான் கல்வியினூடாகவே எமது சமூகத்தினை வழிநடத்த முடியும் கல்வியில் மாணவர்களை கரைசேர்க்கின்ற ஒட்டுமொத்த பொறுப்பும் அதிபர்; ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. பெற்றோர்கள் சமூகம், அரசியல் தலைவர்கள், எல்லோரும் சேர்ந்து பக்கதுணையாகவே நிற்கமுடியும். பாடசாலையில் பல குறைபாடுகள் இருப்பதாக பாடசாலை அதிபர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இப் பாடசாலையின் உட்கட்டமைப்பு செயற்பாடுகளையும் ஏனைய தேவைப்பாடுகளையும் நிவர்த்திசெய்வதற்கான ஏற்பாடுகளை நிச்சயமாக செய்து கொடுப்போம்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்திபெற்றவர்கள்தான் இருந்தாலும் பிள்ளைகள் மத்தியில் ஒரு ஊக்கத்தினை ஏற்படுத்துவதற்கான அல்லது உந்து சக்தியை ஏற்படுத்துவதற்காக வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவிக்கு மாத்திரம் துவிச்சக்கர வண்டி வழங்கப்படுகின்றது அதுவும் வரலாற்றில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் 21 வருடங்களுக்கு பிறகு இந்த பாடசாலையில் ஒரு மாணவி வெட்டுப்புள்ளிக்கு மேல்பெற்று இப் பாடசாலையின் பெயரினை உயர்த்தி இருக்கின்றார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
புதிய கொலணி சிவவித்தியாலயம் பாடசாலையின் அதிபர் தமிழ்வாணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு, பிரதேசகுழுத் தலைவர் புவனேந்திரன், பிரதேச இளைஞர் அணிச்செயலாளர்; கிருஸ்ணமேனன் மற்றும் கிராமியக்குழுத் தலைவர் பாஸ்கரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்
0 Comments:
Post a Comment