“பசுமையான பூமி அன்பான மனிதம்”; இளைஞர் அணியினரால் நிகழ்வுகள்.
பசுமையான பூமி அன்பான மனிதம்”; என்ற தொனிப் பொருளின் கீழ் வெருகல் கிங் ஸ்டார் விளையாட்டுக் கழக இளைஞர் அணியினர் பயன்தரும் மரங்களை நாட்டும் திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளதாக ஏ. தினேஸ்குமார் தெரிவித்தார்.முதற்கட்டமாக வெருகல் - பூமரத்தடிச்சேனை பொது மைதானத்தில் நிழல்தரும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
வெருகல் பிரதேச செயலக விவசாயப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பற்குணநாதன் லதா, பிரதேச விவசாய சம்மேளனத் தலைவர் ரீ. ரவிச்சந்திரன், வெருகல் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கே. சுமந்தன், மகளிர் சங்க உறுப்பினர் ஜே. தயாளகுமாரி, கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளர் எம். குகதாஸ், ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர், உட்பட கிங் ஸ்டார் விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள், பசுமையான பூமி அன்மான மனிதம் அமைப்பினர், கிராமத்தவர்கள், நலன் விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.
நிகழ்வில் இலுப்பை, மருது, வேம்பு, புங்கை உள்ளிட்ட 40 இற்கு மேற்பட்ட நீண்ட கால பயனளிக்கும் ஆர்வலர்களால் நாட்டி வைக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வோடு இணைந்ததாக கிங் ஸ்டார் விளையாட்டு கழக அங்கத்தவர்கள் 18 பேருக்கு புதிய சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த சீருடை அன்பளிப்புக்கள் நலன் விரும்பியான தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புஸ்பராசா ரசிக்காந்தன் என்பவரால் அளிக்கப்பட்டதாகும்.
கட்டிடங்கள் அமைத்தல், உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் போன்ற இன்னும் பல வகையான மனிதத் தேவைகளுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் இயற்கைச் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. தகிக்கும் வெயில் காலங்களில் ஒதுங்குவதற்கு மரநிழலே இல்லாத நிலை உருவாகியிருக்கின்றது. எனவே இத்தகைய ஆபத்தான சுற்றுச்சூழல் பாதிபவ்பைக் கவனத்தில் எடுத்து பவதிலீட்டு மரம் நாட்டும் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க உத்தேசித்திருப்பதாக கிங் ஸ்டார் விளையாட்டு கழக செயலாளரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் களப்பணியாளருமான ஜெயவீரசிங்கம் தவமுரளி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment