25 Dec 2023

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் வழிப்படுத்தலில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பினூடாக இடர்கால நிவாரணம்.

SHARE

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் வழிப்படுத்தலில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பினூடாக இடர்கால நிவாரணம்.வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவும் பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதுடன், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் நெறிப்படுத்தலின் ஊடாக பல அரசசார்பற்ற, தனியார் நிறுவனங்களும் இடர்க்கால நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. 

அந்தவகையில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பினூடாக பத்தாயிரம் அமெரிக்க டொலர் (USD 10,000) பெறுமதியான உலருணவு பொதிகளை பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்காக வழங்குவதற்குரிய அங்குரார்ப்பண நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்  நடைபெற்றது. 

வெள்ளத்தால் அதிகம் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கு  தலா மூவாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபா (3,250/=) என்ற அடிப்படையில் இந்த உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்படவுள்ளன. 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில், ஜனாதிபதியின் வடக்கு மாகாண இணைப்புச் செயலாளர் லெ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் க.ஏகாந்தன் மற்றும் லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் மாவட்டம் 306 B1 இன் ஆளுநர் பிளாசிடஸ் எம். பீட்டர் அவர்களால் வழிநடத்தப்படும் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: