சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்ட்டிப்பு.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சுதந்திர சமூக வலது குறைந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் புதன்கிழமை (20.12.2023) நடைபெற்றது.
அங்கவீனமுற்ற நபர்கள் தொடர்பில் அவர்களுடன் மற்றும் அவர்களினால் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையச் செய்வதற்கு செயலில் ஒன்றிணைத்தல் எனும் தொணிப் பொருளின்கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் மகிழூர்முனை, களுதாவளை, உள்ளிட்ட பல இடங்களில் இயங்கிவரும் விசேட தேவையுடையோர் கல்வி அலகு மாணவர்களின் கலை நிகழ்வுகள் இந்நிகழ்வை அலங்கரித்தன.
மேலும், இதன்போது ஏனைய விசேட தேவையுடையோர்களின் ஆற்றல்களும் வெளிக்கொணரப்பட்டதுடன், விசேட தேவையுடையோருக்காக கடமையாற்றி வருகின்ற உத்தியோகஸ்த்தர்களும், இதன்போது பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கும் பரிசில்களும், வழங்கி வைக்கப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சுதந்திர சமூக வலது குறைந்தோர் சங்கத்தின் தலைவர் ஜெ.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று சமூகசேவை உத்தியோகஸ்த்தர், ஆர்.கிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் தலைவர் க.ஜீவராசா உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment