தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இந்து ஆலயங்களிலும் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை மட்டக்களப்பிலும் ஞாயிற்றுக்கிழi காலை கிழக்கு இலங்கையில் தொன்மை வாய்ந்ததும் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலும், தீபாவளியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கணேச ரிவிசாந்த கணேச குருக்கள் தலைமையில் பக்திபூர்வமாக சிறப்பாக இடம் பெற்றது.
தீபத் திருநாளை முன்னிட்டு ஆலயம் அலங்கரிக்கப்பட்டு அதன் பின்னர் விக்னேஸ்வரா பெருமானுக்குரிய பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. இதில் மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்து பெருமளவான பக்த அடியார்கள் கலந்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டனர். தீபத் திருநாளை முன்னிட்டு ஆலயத்தில் தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் இன்றயதினம் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment