பெரியபோரதீவு மட்பாண்ட நிலைய வீதி காபட் வீதியாக புனரமைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு கிராமத்தில் மிக நீண்டகாலமாக குன்றும் குழியுமாகக் காணப்பட்டு வந்த மட்பாண்ட நிலைய வீதி காபட் வீதியாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
இவ்வீதி புனரமைப்புக்கான வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி பொது மக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளிற்கிணங்க இவ்வீதிகள் புனரமைப்புச் செய்யப்படுகின்றது.
இவ்வீதி புனரமைப்பு வேலைத்திடங்களை வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரதிநிதியாக கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.
இவ்வீதி புனரமைப்புச் செய்வதன்மூலம் பெரியபோரதீவு, முனைத்தீவு, கோவில்போரதீவு, வெல்லாவெளி. புன்னக்குளம், உள்ளிட்ட பல கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் போக்குவரத்தை இலகுவாக மேற்கொள்ள முடியும் என அப்பகுதி மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment