1 Nov 2023

சமாதானத்தை நிலைநிறுத்தும் செயற்பாடுகள் பற்றிய ஆராய்வு.

SHARE

சமாதானத்தை நிலைநிறுத்தும்  செயற்பாடுகள் பற்றிய ஆராய்வு.

சமாதானத்தை நிலைநிறுத்த உள்ளுர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  முன்னெடுக்கும் செயற்பாடுகள் பற்றி ஆராய்வு.

மட்டக்களப்பில் சமூக சகவாழ்வை முன்னெடுக்கும் தேசிய சமாதானப் பேரவையின்  செயல்திட்டங்களின் ஒரு அம்சமாக சமாதானத்தை நிலைநிறுத்த உள்ளுர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  முன்னெடுக்கும் செயற்பாடுகள் பற்றிய ஆராய்வு இடம்பெற்று வருவதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் மாவட்டத்தில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கற்றுக் கொள்ளும் கருத்தரங்கு திங்கட்கிழமை  (30.10.2023) மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றது.

தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் நிரோஷா அந்தோனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்தில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சமூகங்களுக்கிடையில் சமாதான சகவாழ்வை வலுப்படுத்தும் விதமாக தேசிய சமாதானப் பேரவையினால் சமாதானத்திற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக நிரோஷா நிகழ்வை ஆரம்பித்து வைக்கும்போது கருத்துத் தெரிவித்தார்.

சமூகங்களுக்கிடையிலான சமாதானத்தையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணிவருவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

சமூக நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம், சமாதானம்  ஆகியவற்றோடு இன ஐக்கியத்தை கட்டிக்காக்கும் விடயங்களின் மற்றொரு பரிமாணமாக உள்ளுர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  முன்னெடுக்கும் செயற்பாடுகள் பற்றிய ஆராய்வு இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் ரீ. லோகிதாஸ்  மாவட்ட சர்வமதப் பேரவைக்கான உதவி இணைப்பாளர் எம்.. அப்துல் ஹமீட், செயல் குழுவின் செயலாளர் .எல். அப்துல் அஸீஸ், ஆகியோரும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சமாதானத்தை நிலைநிறுத்த உங்களுடைய உள்ளுர் நிறுவனங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் என்ன? சமாதானத்தை நிலைநிறுத்த முன்னெடுத்த செயற்பாடுகளில்

வெற்றிகள்,இலக்குகள், முறைமைகள், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது, எதிர் கொண்ட சவால்கள் அனுபவங்கள், சவால்கள் தற்போதும் சவால்களாக உள்ளனவா, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கு முன்வைக்கும் ஆலோசனைகள் என்ன? போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.




 







SHARE

Author: verified_user

0 Comments: