1 Nov 2023

கந்தசாமி அருள்பிரசாந்தன் தீவு முழுவதற்குமான சமாதான நீதவாவானாக நியமனம்.

SHARE

கந்தசாமி அருள்பிரசாந்தன் தீவு முழுவதற்குமான சமாதான நீதவாவானாக நியமனம்.

மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி அருள்பிரசாந்தன் தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக நியமனம் பெற்றுள்ளார்.

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பகல்வியை  பயின்ற அவர் இடைநிலை கல்வி மற்றும் உயர்தர படிப்பினை கல்முனை உவெஸ்லி  உயர்தர பாடசாலையில் கற்றுள்ளார்.

இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டத்தினை பூர்த்தி செய்து, தற்போது போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோத்தராகவும் கடமையாற்றி வருகின்றார்.

வாய்மொழி கவிஞர் கணபதிப்பிள்ளையின் மகனான செட்டியூர்  சிந்தனை செல்வன் என எனப்படும் அதிபர் மயில்வாகனம் அவர்களின்  பேரனாவார்.

இயல்பிலேயே பேச்சாற்றலும் அறிவிப்பு திறனும் கொண்ட இவர் 2008 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட அறிவிப்பாளர் தேர்வு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டவர். இக்கிராமத்தில் வளர்ந்து வரும் கவிதை துறை ஆர்வலராக தன்னை இனம் காட்டி வருகின்றார்

செட்டிபாளையம் சனசமுக நிலையத்தில் நான்கு வருடம் தலைவராக பணி புரிந்த அவர், செட்டிபாளையம் சிவன் ஆலயத்தின் சிரேஷ்ட உறுப்பினராகவம், இக்கிராமத்தின் பல்வேறு சமூக நலத் திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்தி சேவை செய்து வருகின்றார்.

சிவன் ஆலயத்தின் கீழ் இயங்கும்  திருவருள் நுண்கலை மன்றம், திருவருள் கல்வி அபிவிருத்திச் சபை, சமூக மேம்பாட்டு அமைப்பு  முதலான வலிந்துதவும் சங்கங்களின் சிரேஷ்ட அங்கத்தவராகவும்  செயற்பட்டு பங்களிப்பு  செய்து வருகின்றார். 



SHARE

Author: verified_user

0 Comments: