5 Oct 2023

JEDBஇல் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்.

SHARE

JEDBஇல் பணிபுரியும் தோட்ட  தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்.

-10 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் 

JEDB  நிறுவனத்திற்குட்பட்ட கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை தோட்டத்தில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து JEDB தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் JEDB பெருந்தோட்ட நிறுவனத்திடம் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

1. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு EPF கொடுப்பனவு வழங்கும் வரை  விவசாய  பயிர்ச்செய்கைக்கான காணி வழங்கப்படும் 

2.தோட்டத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கு தேயிலை பயிர்ச்செய்கை மேற்கொள்ள  முன்னுரிமை அளிக்கப்படும்.

 3. நிலுவையில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு உரமிடுதல்.

 4.  தோட்ட நிர்வாகத்தினால் அறவிடப்படும் 

தொழிலாளர் கடன் தொகை மீள 

செலுத்துவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், வட்டித் தொகையை தோட்ட நிர்வாகம் செலுத்த வேண்டும். 

5. தோட்ட கூட்டுறவு சங்க கணக்குகளை தோட்ட தொழிலாளர்களுக்கு சமர்ப்பித்தல்.

 6. தற்காலிக நிவாரணத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் EMA பெறுதல். 

7. தோட்ட பகுதியில் காணப்படும் லயின் குடியிருப்புகளில்  சரிந்து விழும் மரங்களை வெட்டத் தொடங்குதல்.

 8. தோட்ட அலுவலகத்தில் தமிழ் பேசும் உத்தியோகஸ்தர்  நியமித்தல். 

9. ஒவ்வொரு நிருவையிலும் 

சாதாரண நாட்களில் 1 கிலோ நிறுவை குறைப்பு மற்றும்  மழை நாட்களில் 2 கிலோ நிறுவை குறைப்பும். 

10.தூர இடங்களில் காணப்படும் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்களின் நலன் கருதி புதிய கழிவறைகள் நிர்மாணம்  போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அக்கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த JEDB பெருந்தோட்ட நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் இ.தொ.கா உப தலைவர்  பரத் அருள்சாமி, உபத் தலைவர் ராஜாமணி மற்றும் தொழில்துறை உறவு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: