கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு திருக்குடமுழுக்கு விழா.
தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள நாற்பதுவட்டைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட கிழக்கிலங்கையில் மிகவும் உயரமான பாலமுருகன் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை (29.10.2023) சுபமுகுர்த்த வேளையில் 10.00 மணியளவில் திருக்குடமுழுக்கு விழா இடம்பெற்றது.
கிழக்கிலங்கையின் பிரிசித்திபெற்ற தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் சிறப்பிடம் பெறும் தாந்தாமலை முருகன் ஆலயத்தை பிரதிபலிக்கு முகமிக நிர்மானிக்கப்பட்ட கிழக்கிலங்கையின் உயரமான பால முருகன் சிலை திருக்குடமுழுக்கு பெருவிழா இடம்பெற்றது.
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சுதானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்ற திருக்குடமுழுக்கு பெருவிளாவில் சிவ ஸ்ரீ சாம்பசிவம் சிவாச்சாரியார் உள்ளிட்ட பெருமளவான பக்த அடியார்கள், சிலை நிர்மான குழுவினர் மற்றும் ஆலம் அறங்காவலர் சபையினர் என அதிகளவானோர் கலந்துகொண்டு திருக்குடமுழுக்கு பெருவிழாவினை சிறப்பித்திருந்தனர்.
இதன்போது ஆலய நிர்மான பணிக்காக கிடைக்கப்பெற்ற நிதியில் இருந்து வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள் சிலருக்கு கற்றல் உபகரண தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment