கிழக்கில் முதன் முதலாக நடைபெற்ற கலை இலக்கிய மன்றங்களுக்கிடையிலான வினா விடைப் போட்டி.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு, வினைத்திறனுடன் இயங்குகின்ற தெரிவு செய்யப்பட்ட கலை இலக்கிய மன்றங்களுக்கான வாய்மொழி மூலமான வினா விடைப்போட்டிகள் சனி மற்றும் ஞயிறு (28,29.10.2023) ஆகிய இரு தினங்களும் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் நடைபெற்றன. இது கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் சரணவமுத்து நவநீதன் அவர்களின் சிந்தனையின் அடிப்படையில் கிழக்கிலுள்ள கலை இலக்கிய மன்றங்களுக்கான வாண்மையை விருத்தி செய்வதற்குரிய பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற்று வருகின்றன. அற்காகவேண்டி கலை இலக்கிய மன்றங்களிடையே எழுத்துப் பரீட்சைகள் அண்மையில் நடைபெற்றிருந்தன.
அந்த எழுத்துப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற 30 கலை இலக்கிய மன்றங்கள் இந்த வினா விடைப் போட்டிகளுக்கப் பங்கு பற்றியிருந்தன. இதில் வெற்றிபெறும் கலை இலக்கிய மன்றங்களுக்கு மிகப்பெரிய பணத் தொகையும் விருதும், சான்றிதழ்களும், எதிர்வரும் நவம்பர் மாதம் காரைதீவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் வைத்து வழங்கப்படவுள்ளன.
இவ்வாய்மொழி மூலமான வினா விடைப் போட்டிகள் இலங்கை, இந்திய கலை இலக்கியம், மற்றும் உலக கலை இலக்கியம், வரலாறுகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்துள்ளதுடன், இதனூடாக கலை இலக்கிய மன்றங்களின் அறிவுப் பகிர்வும் மேம்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் காலத்திற்குக் காலம் கிழக்கிலுள்ள கலைஞர்களை சக்தி மயப்படுத்தி ஒரு குழுவாக இயங்குவதற்குரிய செயற்பாடுகளில் வினைத்திறனுடன் இயங்குகின்ற கலை மன்றங்களை ஊக்கப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment