26 Oct 2023

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

SHARE

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை(25.10.2023) இரவு மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றில் சடலம் ஒன்று உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பொலிசாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இஸ்த்தலத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை அவதானித்ததைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அவ்விடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் நீதிபதியின் முன்னிலையில் சடலம் நீர் நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

தற்போது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உபட்படுத்துமாறு நீதிபதி  உத்தரவிட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் போரதீவுப்பற்றுப் பிரதேச செலயகத்திற்குட்பட்ட பொறுகாமம் சமூர்த்தி வங்கியில் கடமைபுரியும் பெரியகல்லாற்றைச் சேர்ந்த நிலகசன் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் இச்சம்பவம் குறித்தது களுவாஞ்சிகுடி பொசலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: