வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உளநல பிரிவில் தொழில்வாண்மை விருத்தி நிலையம் திறந்து வைப்பு.
அவுஸ்ரேலியா நாட்டில் தளமாக கொண்டு இயங்கும் வன்னி ஹோப் நிறுவனம் இலங்கையில் மனிதாபிமான பல அபிவிருத்தி சார்ந்த செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் இலங்கையில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், சமூக அபிவிருத்தி, உட்கட்டுமான வசதிகள் என முன்னெடுத்து வரும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒரு பிரிவாக இயங்கிவரும் உளநல பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான புனர்வாழ்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உளநல பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் புனர்வாழ்வு திட்டமாக தொழில்வாண்மை விருத்தி நிலையம் வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைய உளநல சிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர் சிரேஷ்ட வைத்தியர் ஜூடி ரமேஷ் ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி ஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர் றஞ்சன் சிவஞானம்சுந்தரம் மற்றும் பணிப்பாளர்சபை உறுப்பினர்களான வைத்தியல் மாலதி வரன், இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் முஹமட் பாரிஸ் உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment