13 Sept 2023

பீடை நாசினி மற்றும் களைநாசினிகள், பாவிக்கப்பட்ட வெற்றுப் போத்தல்களை சேகரித்து அளிக்கும் விழிப்பூட்டல்.

SHARE

பீடை நாசினி மற்றும் களைநாசினிகள், பாவிக்கப்பட்ட வெற்றுப் போத்தல்களை சேகரித்து அளிக்கும் விழிப்பூட்டல்.

பீடை நாசினி மற்றும் களைநாசினிகள், மற்றும் பாவிக்கப்பட்ட வெற்றுப் போத்தல்களை சேகரித்து அளிக்கும் விழிப்பூட்டல் நிகழ்வொன்று புதன்கிழமை(13.09.2023) மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை விவசாய போதனாசிரியர் பொ.சிறிபவனின் தலைமையில் களுதாவளை கிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பீடைநானிகள் பதிவாளர் நாயகம் கலாநிதி சுமித் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராசா, மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் சி.சித்திரவேல், குறொப்லைவ் கூட்டுநிறுவன இணைப்பாளர் யு..சுக்கிரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அப்பகுதி விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.

பீடைநானிகள் பாவிக்கப்பட்ட வெற்றுக்கொள்கலன்களால் நாம் வாழும் சூழலுக்கும் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கும் தீங்கு ஏற்படுத்துவது, மாத்திரமன்றி டெங்கு போன்ற கொடிய நோய்களையும் பெருக்குவதற்கு முக்கிய ஊடகமாக காணப்படுகின்றன. எனவே விவசாயிகள் பாயிர்களுக்குப் பாவித்து விட்டு வீசுகின்ற வெற்றுப் போத்தல்கள் மற்றும் கலன்கள், கொள்கலன்கள், போன்றவற்றைச் சேகரித்து அளிக்க வேண்டியது நம் அனைவரினதும் தலையாய கடமையாகும் என பீடை நானிகள் பதிவாளர் நாயகம் கலாநிதி சுமித்  இதன்போது தெரிவித்தார்.














SHARE

Author: verified_user

0 Comments: