ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் வருடாந்த திருவிழா வியாழக்கிழமை (25.08.2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பிரதேச மக்களினால்
ஏற்பாடு செய்யப்பட்ட மாதாவின் ஊர்வலம் ஆலயத்தை வந்தடைந்தபின் சதா சகாய மாதாவின் கொடியேற்றம்
பங்குத்தந்தை ஜெமில்டன் தலைமையில் இடம் பெற்றது.
தொடர்ந்து தன்னாமுனை,
டச்பார் முதலாம் வட்டாரம் இறைமக்கள் மற்றும்
இளையதம்பி குடும்பத்தினரும் இணைந்து முதலாம்
நாள் திருவிழாவினை நடாத்தினர்.
முதலாம் நாள் திருவிழா
திருப்பலியினை அருட் தந்தை லோரன்ஸ் அருட் தந்தை ஜெமில்டன் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
சகாய மாதாவின் பாதயாத்திரை
எதிர்வரும் சனிக் கிழமை 2 ஆம் திகதி காலை 5
மணிக்கு மட்டக்களப்பு நகரில் இருந்து ஆரம்பமாகி வவுணதீவு ஊடாக ஆயித்தியமலை ஆலயத்தை
சென்றடையும். இதே போன்று அதே தினத்தில் செங்கலடியிலிருந்து ஆரம்பிக்கும் பாதயாத்திரை
கரடியனாறு ஊடாக ஆலயத்தை சென்றடையும் என அருட் தந்தை ஜெமில்டன் தெரிவித்தார்.
பெருவிழா திருப்பலி
எதிர்வரும் 3 ஆம் திகதி காலை 7.15 மணிக்கு இலங்கைக்கான திருத்தந்தையின் பிரதிநிதி பிறயன்
உடைக்வே ஆண்டகையும் மட்டக்களப்பு மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையும் இணைந்து
ஒப்புக் கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment