9 Jul 2023

மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் வீழ்ந்த தனியார்பேரூந்து.

SHARE

மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் வீழ்ந்த தனியார்பேரூந்து.

கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று மன்னம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள கொட்டலி பாலத்தில் வீழ்ந்து ஞாயிற்றுக்கிழமை(09.07.2023) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

மன்னம்பிட்டி பேரூந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு கல்முனை நோக்கி குறித்த தனியார் பேரூந்து பணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மன்னப்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள கொட்டலி எனும் பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 இற்கு மேற்பட்டோர் காயங்களுக்குட்பட்டதாகவும், தகவல்கள் வெளிவருகின்றன.

ஊயிரிழந்தவர்களின் உடல்களும், பாதிக்கப்பட்டவர்ளும், பொலன்நறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்னதாகவும், அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இஸ்த்தலத்திற்கு விரைந்த பொலிராரும், பொதுமக்களும், போரூந்தில் அகப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 





SHARE

Author: verified_user

0 Comments: