மட்டக்களப்பில்இடம்பெற்ற எல்லைகள் கடந்த இளைஞர்கள் எனும் சர்வ மத நல்லிணக்க மாநாடு.
கிழக்கு மாகாணத்தில் இளைஞர்களிடையே சமாதான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் மாகாண ஆளுநரின் பணிப்புரையின் பெயரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பில் எல்லைகள் கடந்த இளைஞர்கள் எனும் சர்வ மத நல்லிணக்க மாநாடு வெள்ளிக்கிழமை(07.07.2023) மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதேவேளை நிலையான அபிவிருத்திக்கு இளைஞர்களிடையே சமாதானத்தை கட்டி எழுப்பும் நோக்குடன் இந்த மாநாடு ஒழுங்கு நடைபெற்றர். மட்டக்களப்பு காவியா சுய அபிவிருத்தி பெண்கள் அமைப்பின பணிப்பாளர் திருமதி யோகமலர் அஜித்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்தந்தை எ.நவாஜி அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக் குழுவின் பிரதி இணைப்பாளர் ஏ.இசதின், மட்டக்களப்பு வலைய முன்னாள் கல்வி பணிப்பாளர் திருமதி.சுபா.சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு தங்களது விரிவான சமாதானத்தை கட்டி எழுப்பும் செயற் திட்டங்கள் சம்பந்தமாக இளைஞர்களுக்கு விரிவான கருத்துரைகள் வழங்கி வைத்தனர்.
இதில் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தற்போது நாட்டில் இடம் பெறுகின்ற ஆர்ப்பாட்டங்களின் போது இளைஞர்கள் அதன் பின்னணி தெரியாமல் கலந்து கொண்டு அதன் பின்னர் அவர்கள் முகங்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும், அதிலிருந்து அவர்களை எவ்வாறு மீட்டெடுப்பது சம்பந்தமாகவும் இங்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் அவர்களுக்கு விரிவான கருத்துரைகள் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment