சிலோன் கொலோஜ் ஒவ் நேர்ஷிங் மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் இயங்கி வரும் சிலோன் கொலோஜ் ஒவ் நேர்ஷிங் மாணவர்களுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் (10,11.07.2023) ஆகிய தினங்களும், அடிப்படை முதலுதவிப் பயிற்சிநெறி களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.
30 மாணவர்கள் பங்கு கொண்ட இப்பயிற்சிநெறியை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவிப் போதனாசிரியர்களான த.வசந்தராஜா மற்றும் வ.சக்திவேல் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இதன் இறுதிநாளான செவ்வாய்கிழமை முதலுதவிப் பயிற்றியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
சிலோன் கொலோஜ் ஒவ் நேர்ஷிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜே.மியூறியா டிலாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா, அதன் செயலாளர் சா.மதிசுதன், சிலோன் கொலோஜ் ஒவ் நேர்ஷிங் நிறுவனத்தின் முகாமையாளர் திருமதி.பி.ராதிகா அருட்தந்தையர்களான ரவிக்குமார் மற்றும் அமலதாஸ், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment