அறநெறிப்பாடசாலைக்கு அலுமாரி வழக்கி வைப்பு.
அவுஸ்ரேலியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் வன்னிஹோம் எனும் தொண்டு நிறுவனம் இலங்கையில் அனைத்து இன மக்கள் மத்தியிலும் பல்வேறுபட்ட சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலைக் கிராமத்திலுள்ள காட்டித்தந்த எண்கோணேஸ்வரர் அறநெறிப் பாடசாலைக்கு திங்கட்கிழமை(03.07.2023) சுமார் ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான அலுமாரி ஒன்றை வன்னிஹோப் நிறுவனம் அன்பளிப்புச் செய்துள்ளது. அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியர் எஸ்.அர்சுன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சில் வன்னிஹோப் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.றேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அலுமாரியைக் கையளித்தனர்.
வன்னிஹோப் நிறுவனம் இலங்கையில் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலும், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாம், அறநெறிப் பாடசாலைகளுக்கு சத்துணவுத்திட்டம், உள்ளிட்ட பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment