3 Jul 2023

மருத்துவர் ச.சௌந்தரராஜன் திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 45ஆது தலைவராக பதவியேற்பு நிகழ்வு.

SHARE

மருத்துவர் ச.சௌந்தரராஜன் திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 45ஆது தலைவராக பதவியேற்பு நிகழ்வு.
திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 45 ஆவது தலைவராக மருத்துவர் ச.சௌந்தரராஜன் அவர்கள் பதவி ஏற்க்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை (02.07.2023) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மருத்துவர்  கிழக்கு  பல்கலைக்கழக திருகோணமலை வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் வர்ணகுலேந்திரன்  கலந்து கொண்டார். மேலும் துணை தலைவர் LANKA IOC PLC, Trincomalee  கபிராஜ் கண்ட்ரி மண்டல்  உள்ளிட்ட பலரும் கலந்து கெர்ணடிருந்தனர்.

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் நா.கிட்னதாஸ் கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவரது காலத்தில் திருகோணமலை ரோட்டரி கிளப் சிறப்பாக செயற்பட்டதாகவும் அதற்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறிகௌரவித்தார்.

செயலாளர் எஸ்.ஜெய்சங்கர்  2022 - 2023 ஆண்டில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பௌசி ராஜீவ் என்ற ஒரு நோயாளிக்கு மருத்துவ   உதவியாக   சுள. 30,000 ரூபா கையளிக்கப்பட்டது.

பிராஜ் கண்ட்ரி மண்டல் LANKA IOC PLC, Trincomalee சார்பில்  360000 ரூபா மான்களுக்கான உணவு அளிக்கும் செயற்பாட்டுக்கு வழங்கப்பட்டது.     

இதன்போது கடந்த ஆண்டின் தலைவர்  நா.கிட்னதாஸ் புதிதாக தெரிவான தலைவர் மருத்துவர்  என்.சௌந்தரராஜன் அவர்களுக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பிரதம விருந்தினர் மருத்துவர்  என்.வர்ணகுலேந்திரன் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் பொருளாதார நிலையில் தேவை உள்ள மனிதர்களுக்கு, மற்றவர்களுடன் இணைந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.












SHARE

Author: verified_user

0 Comments: