13 Jun 2023

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை மும்முரம்.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை மும்முரம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மும்முரமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் திங்கட்கிழமை(12.06.2023) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்றுபிரதேசத்தில் டெங்கு பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

களுவாஞ்சிகுடி பொதுசுகாதார வைத்திய பிரிவினரின் ஏற்பாட்டில் பிரதேச பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும், இணைந்து பல பகுதிகளிலும் பரிசோதனைகளை முன்னெடுத்திந்தனர்.

இதன்போது பொது இடங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், மக்கள் குடியிருப்புக்கள், என பல இடங்களிலும் நேரடி கள விஜயங்களை மேற்கொண்டு மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதோடு, டெங்கு பரவும் சூழலை வைத்திருந்தவர்கள் இதன்போது எச்சரிக்கப்பட்டு அவ்விடங்களை உடன் துப்பரவு செய்யுமாறும் எச்சரிக்கப்பட்டனர்.

எதிர்வரும் மழை காலத்தில் எமது பகுதியிலும் டெங்கு நுளப்பின் பெருக்கம் அதிகம் காணப்படுவதனால் நாம் முற்கூட்டியே எமது பிரதேசத்தை டெங்கு நோய் அற்ற பிரதேசமாக மாற்றுவதற்றாக வேண்டி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைவாகவும், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மேற்கார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டுதலின் பெயரில் இப்பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை நாம் விளையாட்டுக் கழகங்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகஸ்த்தர்களுடனும் இணைந்து நடவடிக்கைகளை முன்நெடுத்துள்ளதாக இதன்போது களுவாஞ்சிகுடி பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் கே.இளங்கோவன் இதன்போது தெரிவித்தார்.








 

SHARE

Author: verified_user

0 Comments: