மட்.களுதாவளையில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவுத்
திட்டம் ஆரம்பித்து வைப்பு.
வன்னிஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் களுதாவளையில் அமைந்துள்ள எட்டு அறநெறிப் பாடசாலைகளுக்கும் இச்சத்துணவு வழங்கும் செயற்பாடு இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.
களுதாவளை இந்துமா மன்றத்தின் தலைவர் ப.குணசேகரன் தலைமையில் களுதாவளை இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னிஹோப் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாட்ட இணைப்பாளர் சீனித்தம்பி றேகா, பட்டிருப்பு கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரேஸ், ஓய்வு பெற்ற சிறைச்சாலை ஆணையாளர் இராஜேஸ்வரன், மற்றும் ஆலயங்களின் நிருவாக சபை உறுப்பினர்கள், இந்து மன்ற உறுப்பினர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
வன்னிஹோப் அவுஸ்ரோலியா நிறுவனம் இலங்கையில் தமிழ், சிங்கம், முஸ்லிம், கிறிஸ்த்தவ மக்களுக்கு எதுவித வேறுபாடுகளுமின்றி வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி, உள்ளிட்ட பல துறைகளிலும் தமது தன்னார்வ சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்களை சிறு பராயத்திலிருந்து அறநெறி வழியில் நற்கருத்துக்களை வழங்குவதற்கும் பெரிதும் உதவி வருவதாக இதன்போது கலந்து கொண்ட வன்னிஹோப் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாட்ட இணைப்பாளர் சீனித்தம்பி றேகா, தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment