களுதாவளையில் கண்ணகை அம்மன் கரகம் சதங்கையணி விழா.
சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் க.கிஷோபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் க.பாஸ்கரன், கலாசார உத்தியோகஸ்த்தர்கள், ஆலயங்களின் நிருவாகிகள், கலைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிறுமியர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்ட கரகம் பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்பட்ட களரியில் வைத்து சிறுமியர்களுக்கு காற்சதங்கை அணிவிக்கப்பட்டு, ஆற்றுகை செய்யப்பட்டன. இக்கரகத்தை களுதாவளையைச் சேர்ந்த த.சந்திரலிங்கம் அண்ணாவியார், சி.க.தெய்வநாயகம் ஏடு அண்ணாவியார் குழுவினர், பழக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வருடாந்தம் நடைபெறும் செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உத்சவத்தை முன்னிட்டு இவ்வாறு களுதாவளைக் கிராமத்தில் சிறுமியர்களைக் கொண்டு கண்ணகை அம்மான் கரகம் அரங்கேற்றப்படுவது வழக்கமாகும் அதுபோல் இவ்வருடம் மீண்டும் அரங்கேற்றப்பட்டிருக்கும் இக்கரகம் செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய முற்றலிலும் ஆற்றுகை செய்யப்படவுள்ளமை குறிப்பிட்தக்கதாகும்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment