21 Apr 2023

போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்கு குழுக் கூட்டம்.

SHARE

போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்கு குழுக் கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் போதீவுப்பற்றுப் பிரதேசத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை(20.04.2023) மாலை வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. பிரதே செயலாளர் ஆர்.இராகுலநாயகி அவர்களின் ஒருங்கிணைப்பில் பிரதேச ஒருக்கிணைப்புக்குழுத் தலைவர் இராஜாங்க அமைச்சர் .வியாழேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மற்றும் திணைக்களத் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது விவசாயம் மீன்பிடி, வீடமைப்பு, மின்சாரம், கால்நடை, வீதி அபிவிருத்தி, கைத்தொழில், வங்கிச் சேவைகள்வன ஜீவராசிகள் பாதுகாப்பு, வனவளத்துறை, கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல திணைக்களங்கள் சார்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றுக்குத் தேவையான ஆலோசனைகளும், இதன்போது முன்வைக்கப்பட்டன.

மேலும் மண்டூர் - குருமண்வெளி ஓடத்துறைப் படகுப் போக்குவரத்திற்காக கடந்த 15 ஆம் திகதி முதல் அறவீடு செய்யப்படும் பணத்தொகையை குறைத்து, கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக அதில் பயணம் செய்ய அனுமதித்தல், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் அனைவரிடமும் 10 ரூபாய் மாத்திரம் அறவீடு செய்தல், பிரதேசத்தில் திரியும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தல்இழவயது திருமணங்களைக் கட்டுப்படுதுவதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்தல், அரச சார்பற்ற நிறுவனங்களை அழைத்து பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றிக் கலந்துரையாடுதல்உரிய நேரத்திற்கு, இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளைச் சேவையிலீடுபடச் செய்தல், அடுத்த இப்பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு கிராமிய மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை அழைத்தல், திக்கோடை கிராமத்தில் தனியார் ஒருவருக்கு கூட்டெரு உற்பத்திக்காக வழங்கப்பட்ட அரச காணியை அவரிடமிருந்து மீளப் பெற்று அக்கிராமத்தின் தேவைக்குப் பயன்படுத்துவதற்கு அனுமதித்தல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.













 

SHARE

Author: verified_user

0 Comments: