16 Apr 2023

சித்திரை வருடப்பிறப்பன்று களுதாவளைக் கடலில் ஏற்பட்ட சம்பவம் - தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஆண்களும், பெண்களும்.

SHARE

சித்திரை வருடப்பிறப்பன்று களுதாவளைக் கடலில் ஏற்பட்ட சம்பவம் - தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஆண்களும், பெண்களும்.

சித்திரை வருடப்பிறப்பான இன்றயத்தினம் (14.04.2023) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் அதிகளவு மக்கள் தத்தமது குடும்பத்தினருடன் மாலைப் பொழுதைக் கழித்திருந்தனர். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் அக்கடலில் என்ஜின் பொருத்திய சிறியரக படகு ஒன்றை மிகவும் வேகமாக ஓட்டினர்.

 இதேவேளை கடலில் படகை ஓட்டிய இளைஞர்கள் அப்படகை சற்று நேரத்தில் கரைசேர்த்திருந்தனர் பின்னர் மீண்டும் கடலில் படகை இறக்குவதற்குத் தயாரான நிலையில் அதில் கடற்கரையில் நின்ற இன்னும் சில ஆண்களும், பெண்களும், ஏறினர். பின்னர் படகை கடலுக்குள் நகர்த்திய இளைஞர்கள் என்ஜினை ஸ்ராட் எடுக்க முற்பட்ட வேளை என்ஜின் இயங்கவில்லை, பல முறை முயன்றும் படகில் பெருத்தப்பட்டிருந்த அக்குறித்த என்ஜினுக்கு ஸ்ராட் வரவேயில்லை சிறிது நேரம் கரையிலிருந்து சற்று தொலைவில் படகு தத்தழித்துக் கொண்டிருந்தது. பின்னர் பொங்கிவந்த கலலையில் படகு கரையைநேக்கி தூக்கி வீசப்பட்டது. இதனால் படகிலிருந்த ஆண் ஒருவர் கீழே விழுந்துள்ளார். அவருக்கு மேலே அக்குறித்த படகு வீழ்ந்துள்ளது. இதனால் அவர் உபாதைக்குட்பட்ட நிலையில் கரையில் நின்றவர்களால் மீட்கப்பட்டார்.

கரையை நோக்கி படகு அலையினால் தூக்கி வீசப்பட்டத்தில் படகிலிருந்த ஏனைய ஆண்களும், பெண்களும், மிகவும் தெய்வாதீனமாக கரையிலிருந்தோரால் காப்பாற்றப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்டவரை மீட்டு உறவினர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தில் தெய்வாதீனமாக அனைவரும் காப்பாற்றப்பட்டதாக கரையிலிருந்த மக்கள் தெரிவித்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: