வன்னிஹோப் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு விஜயம்.
இலங்கையின் நாலா பாகங்களிலும் பலவிதமான சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் அவுஸ்ரேலியாவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வரும் வன்னிஹோப் நிறுவனத்தின் பிரதினிதிகள் புதன்கிழi(19.04.2023) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து அவர்களால் முன்நெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், மக்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளளனர்.
வன்னிஹோப் நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்குரிய பணிப்பாளர் எம்.ரி.எம்.பாரீஸ் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரியபோரதீவு, பொறுகாமம், விவேகானந்தபுரம், உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது பெரியபோரதீவு கைவினையாளர் சங்கத்திற்கு மேற்படி அமைப்பினால் ஏற்கனவே முற்கொள்ளப்பட்ட உதவித்திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்ததுடன், அப்பகுதியில் வன்னிஹோப் அனுசரணையில் நிருமாணிக்கப்பட்ட வீடு ஒன்றையும் திறந்து வைத்து உத்தியோக பூர்வமாக பயனாளியிடம் கையளித்துள்ளனர். மேலும் பொறுகாமம், மற்றும் விவேகானந்தபுரம் பகுதியில் கைத்தறி வேலைகளை மேற்கொள்பவரிகளிடமும் நேரில் சென்று அவர்களுக்குத் தேவையான விடையங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன், போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்திற்கும் சென்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி அவர்களுடனனும் பிரதேசத்தின் மக்களின் நிலமை குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment