24 Jan 2023

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவித்த Lions club of Colombo.

SHARE

(சோபிதன்) 

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவித்த  Lions club of Colombo.  

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் Lions club of Colombo Grand circle - district 306 B இன் பிரதான அனுசரணையில்   வித்தியாலய முதல்வர் வே. யோகேஸ்வரன் அவர்களுடைய தலைமையில் க.பொ.த உயர் தர ,சாதாரண தர, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் விசேட சித்தியடைந்த மாணவர்களையும் , விளையாட்டு போட்டிகளிலும் , கலாச்சார போட்டியிலும் தேசிய மட்டம் , மாகாண மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி கௌரவித்து , மாணவர்களுக்கு சீருடை ,கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில்

ஞாயிற்றுக்கிழமை (22.01.2023) நடைபெற்றது

 இந்த நிகழ்வில்  S. Nimal Balaraj ( deputy cabinet secretary ) Lions club of Colombo Grand  circle - district 306 B , ஏனைய Lions club உயர் அதிகாரிகள், பட்டிருப்பு கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளர் ( தமிழ் ) நேசகஜேந்திரன் , செட்டிபாளையம், களுதாவளை பாடசாலைகளின் அதிபர்கள், குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள், சங்கங்கள் கழகங்களின் தலைவர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர் என பலரும் பங்குபற்றினர்.

இதன் போது கருத்து தெரிவித்த வித்தியாலய அதிபர் மட்.பட்.குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயம் தோற்றம் பெற்ற காலம் தொடக்கம் இன்றுவரை கல்வி , கலாச்சாரம் , விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் பல்வேறு விதமான மாணவ சமுதாயத்தை உருவாக்கியுள்ளது. இப்பாடசாலையில் கல்வி பயின்ற பலர் தற்போது உயர் பதவிகளில் இருப்பதாகவும் , சில தடங்களை சந்தித்தாலும் ஆரம்ப கால அதிபர்கள் , பாடசாலை 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப்பேரழிவில் முற்றாக  சேதமடைந்து. இடம்மாற்றம் பெற்று குருக்கள்மடம் செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ளது என தெரிவித்தார்.

பின்னர் மாணவர்களுக்கு சீருடை , வெற்றிகேடயங்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது பாடசாலை நிர்வாகத்தினால் Lions club of Colombo Grand circle - district 306 B உயர் அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டினர்.


 
















SHARE

Author: verified_user

0 Comments: