வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தினால் சத்து உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.
வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சத்து உணவு வழங்கும் வேலைத்திட்டம் திங்கட்கிழமை(23.01.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வன்னிஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கையில் நாடுபூராகவும் முன்னெடுத்து வரும் சத்து உணவு வழங்கும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பைசல் நகர் கிராமத்தில் பாரதி நகர் பாலர் பாடசாலை மற்றும் கடலூர் பாலர் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களின் போசாக்கை அதிகரிக்கும் நோக்கில் காலை உணவுக்கான சத்து உணவு வழங்கும் வேலைத்திட்டம் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ரோட்ரிகோ நிதியத்தின் நிதி அனுசரணையில் வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் ஊடாக இவ் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment