மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளைக் கிராமத்தில் வன்னிஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் களுதாவளை இந்து மாமன்றம் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா சனிக்கிழமை (21.01.2023) களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் நடைபெற்றது.
களுதாவளை இந்து மாமன்றத்தின் தலைவர் ப.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இப்பொங்கல் விழாவில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கட்புல தொழில் நுட்பத்துறையின் தலைவர் கலாநிதி.சு.சிவரெத்தினம், வன்னி ஹோப் நிறுவனத்திக் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சீ.றேகா, பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் சே.சுரேஸ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் சற்குணம், ஆலயங்களின் பரிபாலன சபையினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாரம்பரிய முறையில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் மகத்துவம் தொடர்பில் இதன்போது மாணவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளால் உரைகளும், இடம்பெற்றன. பின்னர் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிலையில் தாம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க தம்மால் இதன்போது முன்நெடுக்கப்பட்ட பொங்கல் விழாவிற்கு நிதி அனுசரணை வழங்கிய வன்னிஹோப் நிறுவனத்திற்கு இதன்போது களுதாவளை இந்து மாமன்றத்தினர் நன்றியறிதலைத் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment