4 Jan 2023

சேவைச் செம்மல் எம்.ஐ. உதுமாலெப்பையின் 50வது சேவை ஆண்டு பொன் விழா நூல் வெளியீடு.

SHARE

(ஏ.எச்.ஹுஸைன்)

சேவைச் செம்மல் எம்.. உதுமாலெப்பையின் 50வது சேவை ஆண்டு பொன் விழா நூல் வெளியீடு.

சமூக சேவையில் 50 ஆண்டுகளைக் கடந்து மக்கள் பணிக்காக தன்னை அர்ப்பணித்த அகில இலங்கை முஸ்லீக் வாலிப முன்னணிகளின் முன்னாள் தேசியத் தலைவர் எம்.. உதுமாலெப்பையின் சேவையைப் பாராட்டி பொன் விழா நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக பொன் விழாக் குழுத் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் .எல். அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு அக்கரைப்பற்று கூட்டுறவு மண்டபத்தில் ஞாயிறன்று 01.01.2023 இடம்பெற்றது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்டத் தலைவர் எம்..எம். றியாஸ் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் சமூக சேவையாளர்கள்அறிஞர்கள்புத்தி ஜீவிகள்இலக்கியவாதிகள்கலைஞர்கள்எழுத்தாளர்கள்ஊடகவியலாளர்கள்ஆய்வாளர்கள் உட்பட இன்னும் பல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் கிராம அலுவலரான உதுமாலெப்பை அவரது அர்ரப்பணிப்புடனான இன மத மொழி பிரதேச பேதமற்ற சமூக சேவைப் பணிகளின் நிமித்தம் நாடறிந்தவராகவும் சர்வதேச அமைப்பான ஐநா வினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட தொண்டராகவும்  அறியப்படுகிறார்  என்று பல அரசியல் தலைவர்களும் அமைப்புக்களின் தலைவர்களும் ஆர்வலர்களும் பொன் வெளியீட்டு நூலில் உதுமாலெப்பையைப்  பாராட்டியுள்ளனர்.












SHARE

Author: verified_user

0 Comments: