2 Oct 2022

வைத்திய அதிகாரி ஜலீலா எழுதிய “சிறகு முளைத்த மீன்;” கவிதை நூல் வெளியிட்டு வைப்பு.

SHARE

 (.எச்.ஹுஸைன்) 

வைத்திய அதிகாரி ஜலீலா எழுதிய சிறகு முளைத்த மீன்; கவிதை நூல் வெளியிட்டு வைப்பு.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றும் ஹயாத்துமுஹம்மது ஜலீலா முஸம்மில் எழுதிய சிறகு முளைத்த மீன்; கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 01.10.2022 இரவு  ஏறாவூர் வாவிக்கரை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

ஏற்பாட்டுக் குழுத் தலைவி ஆசிரியை என்.எம்ஆரிபா  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் விநிஹாறா>  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரும் வைத்தியரான நூலாசிரியரின் கணவருமான எஸ்.எச்முஸம்மில்கிளிநொச்சி மாவட்ட வன இலாகா அதிகாரி எம்.லியாவுல் ஹக்கீம் ஏறாவூர் நகர முதல்வர் எம்.எஸ்நழிம்  உட்பட இலக்கியவாதிகள்எழுத்தாளர்கள்அதிபர்கள்ஆசிரியர்கள்கவிஞர்கள்ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வைத்தியர் ஜலீலாவைத்துறைக்கு மேலதிகமாக அவர் இலக்கியத்துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காக தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தினால் கவிமுகி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வைத்தியர் ஜலீலா எழுதிய இந்த கவிதை நூல் தொகுப்பில்தந்தை சொல் மிக்க மந்திரமில்லைதாயிற் சிறந்த கேடயமில்லைசேற்றில் நின்று சோற்றைத் தருகிறார் உள்ளிட்ட சுமார் 85 தலைப்புக்களில் கவிதைகள் புனையப்பட்டுள்ளன.

கவிதை நூலாசிரியர் வைத்தியர் ஜலீலா அலிகார் தேசியக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மறைந்த யூஹயாத்து முஹம்மதுவின் மகளாவார்இவரது கவிதைகள்ஆக்கங்கள் இலங்கையின் தேசியப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.












SHARE

Author: verified_user

0 Comments: