“நாமே நமக்கு” எனும் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு பயிர் விதைகள் மற்றும் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு.
“நாமே நமக்கு” எனும் அமைப்பினால் மட்.மமே.முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலய மாணவர்களுக்கு பயிர் விதைகள் மற்றும் பயிர் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா வாழ் தமிழ் மக்களின் அனுசரையில் “நாமே நமக்கு” அமைப்பின் பிரதிநிதிகள் வித்தியாலயத்திற்கு நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு பயிர் விதைகள் மற்றும் பயிர் கன்றுகள் வழங்கி வைத்தனர்.
மாணவர்களின் எதிர்கால நலன்கருதி தமது பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து பயிர் விதைகள் மற்றும் பயிர் கன்றுகள் வழங்கி வைத்த “நாமே நமக்கு” அமைப்பினருக்கு பாடசாலைச் சமூகம் இதன்போது நன்றியைத் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மற்றும் மலையக மக்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தல் ஊடாக தன்னிறைவான சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் இச்செயற்றிட்டம் முன்நெடுக்கப்பட்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment