மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் தக்ஷயானந்த ஜீ மகராஜ்ஜிற்கு பிரியாவிடை.
மட்டக்களப்பு, கல்லடி இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ், இலங்கையில் ஆற்றிய நான்கு வருட கால ஜீவ சேவையை நினைவுகூறலும் பிரியாவிடையும் ஞாயிற்றுக்கிழமை (16) திகதி கல்லடி, இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் நடைபெற்றது.
இதேவேளை, கல்லடி இராமகிருஷ்ண
மிஷன் புதிய முகாமையாளராக இதுவரை உதவிப் பொது
முகாமையாளராக சேவையாற்றிய ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கை இராமகிருஷ்ண மிஷனினால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, இந்தியாவில்
இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள சுவாமி சுரர்ச்சிதானந்தஜி கல்லடி இராமகிருஷ்ண
மிஷன் உதவி முகாமையாளராக பணிபுரியவுள்ளார்.
இந்நிகழ்விற்கு பிரதம
அதிதிகளாக இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் மற்றும்
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரன்
கலந்து கொண்டதுடன் கிழக்குப் பல்கலைக்கழக
வேந்தர் ஓய்வு நிலை பேராசிரியர் மா.செல்வராஜா, சுவாமி விபுலாந்த அழகியல் கற்கை நிறுவகப்
பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கெனடி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன்
உள்ளிட்ட அதிதிகள் இணைந்து மலர்மாலை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி சுவாமியை கௌரவித்ததுடன்,
சுவாமியின் ஆசீரையும் பெற்றுக்கொண்டனர்.
0 Comments:
Post a Comment