கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பெத்தான்குடித் திருவிழா.
கிழக்கில் தேரோடும் கோயில் எனப் புகழ்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 7ஆம் நாள் திருவிழா பெத்தான்குடி மக்களினால் ஞாயிற்றுக்கிழமை(04) இரவு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஆலய பிரதம குரு மு.கு.சச்சிதானந்தக் குழுக்கள் தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில் மூல மூத்தியாகிய தாந்தோன்றீஸ்வரருக்கும், கொடித் தம்பத்திற்கும் பூஜைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன. உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தாந்தோன்றீஸ்வரர் உமாதேவியர் சமேதராய் விசேடமாக அமைக்கப்பட்ட சப்புறத்திலும், பிள்ளையார் மூசுக வாகனத்திலும், முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும், விஷ்னுபகவான் குதிரை வாகனத்திலும், சண்டேசுவரர் எருது வாகனத்திலும். மேள தாள வாத்தியங்கள் முழங்க சுவாமிகள் வெளி வீதி வலம் வந்து திருவிழா நடைபெற்றது. ஆலய தலைவர் இ.மேகராசா தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில் பெத்தான்குடி மக்களின் தலைவர் மு.அருட்செல்வம், ஆலய நிருவாகிகள், உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 29.08.2044 அன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்திருந்தது, தேரோட்டம் எதிர்வரும் 11.09.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நடைபெற்வுள்ளதுடன் அன்றயதினம் இரவு 7 மணியளவில் திருவேட்டை இடம்பெற்று, மறுநாள் 12.09.2022 அன்று காலை 6 மணியளவில் தீர்த்தோற்சவத்துடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment