கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் 99வது பட்டிமன்றம்.
கிழங்கிலங்கையில் புகழ்பெற்ற மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் 99வது சிறப்பு பட்டிமன்றம் செவ்வாய்கிழமை(09) மட்.பட்.குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மாணவர்களின் புறகிருத்தியங்கள், இணைப்பாடவிதானம், மற்றும் பேச்சு, விவாதப்போட்டிகளில் ஈடுபாடுகளை மேம்படுததுவதற்காக வேண்டி இப்பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வித்தியாலய அதிபர் புஸ்பராஜாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கதிரவன் பட்டிமன்ற போரவையின் தலைவர் கதிரவன் த.இன்பராஜா உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்குத் தேவையான கருத்துக்களை முன்வைத்தனர்.
இருஅணிகளாக வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த பட்டிமன்றக் குழுவினர் கல்வி அதிகம் மேம்படுத்துவது நற்பழக்கத்தை, என ஒரு அணியும், மற்றைய அணி பொருளாதாரத்தை, எனவும் வாதிட்டு, மாணவர்களுக்கு நற்கருத்துக்களை எடுத்துரைத்தனர். இறுதியில் பட்டிமன்றக்குருவினருக்கு ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment