மாளிகைக்காட்டிலிருந்து இருவர் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று சாதனை.
அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து அண்மையில் வெளியான உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் இரு மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளனர். கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவி அலியார் நஸீஹா உயிரியல் தொழிநுட்ப துறையில் மூன்று "ஏ" சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியாக ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளார். மாளிகைக்காடு கமு/ கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்ற நஸீஹா உயர்கல்வியை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கற்றார். இவரது மூத்த சகோதரன் அலியார் நஜிமுதீன் கடந்த காலங்களில் வர்த்தக பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பொறியியல் துறையில் மாளிகைக்காட்டைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் முஹம்மட் சிமர் மூன்று "ஏ" சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியாக நாற்பத்தியேழாவது இடத்தையும் பெற்றுள்ளார். மாளிகைக்காடு கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்ற முஹம்மட் சிமர் உயர்கல்வியை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கற்றார். கடந்த சாதாரண தர பரீட்சையிலும் ஒன்பது "ஏ" சித்திகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment