சோட்டோகான் தேசிய கராட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர்கள் இருவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை.
சோட்டோகான் தேசிய கராட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர்கள் இருவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
தேசிய ரீதியில் சோட்டோகான் கராட்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
சிரேஸ்ட பிரிவில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது தென்கிழக்கு பல்கலைக்கழக சார்பில் பங்கேற்ற கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர்களான என்.எம்.உமைர் லெவல் 3 காதா மற்றும் குமிதே போட்டிகளிலும் , ஏ.கே.எம்.ஹஸ்னத் கான் கறுப்புப் பட்டி காத்தா போட்டியிலும் தங்கப் பதக்கங்களை வென்று தென்கிழக்கு பல்கலைக்கழத்திற்கும் தாம் கல்வி கற்ற கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகளை தென்கிழக்கு பல்கலைக்கழக கராட்டே பயிற்றுவிப்பாளர் முஹம்மது இக்பால் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments:
Post a Comment