மகிழூர் குளக்கட்டு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் தீ மிதிப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர் அருள்மிகு குளக்கட்டு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு பெருவிழாவின் தீ மிதிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) இரவு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தின் இவ்வருடத்திற்கான சடங்கு கந்த 2022.07.06 ஆம் திகதி ஆரம்பமாமாகியது. தொடற்சியாக 8 நாட்கள் சடங்கு நடைபெற்று எதிர்வரும் 2022.07.13 ஆம் திகதி திருக்குளிர்த்தியுடன் நிறைவு பெறவுள்ளது.
இதனிடையே ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலய முன்றலில் அமைந்துள்ள தீ குளியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தீ மூட்டப்பட்டு அன்றயதினம் இரவு மிகவும் பக்திமயமான முறையில் பக்கதர்கள் தீ பாய்ந்தனர்.
ஆலய சடங்குகள் யாவும் ஆலய சடங்கு கால பிரதம குரு சிவஸ்ரீ நே.விஜியகுமார குருக்கள் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment