மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் நகரில் அமைந்துள்ள லங்கா சிபெற்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வியாழக்கிழமை(28) கியு.ஆர் கோர்ட் பதிவு செய்யப்பட்டு வியாழக்கிழமைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனங்களின் இறுதி இலக்கங்களாகக் கொண்ட 3,4,5 ஆகிய இலக்கங்களை உடைய வாகனங்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபயவிக்கிரம ஆகியோரின் நேரடி கண்காணிப்பில், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களும், பொலிசாரும், குறித்த எரிபொருள் நிலையத்தின் முகாமையாளர் அச்சுதன் உள்ளிட்டோர் இணைந்து மக்களுக்கு இதன்போது எரிபொருள் வழங்குவவதற்குரிய வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன்போது பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் எரிபொருள் நிரப்புவதற்கு வருபவர்களிடம் கியு.ஆர். கோர்டை பதிவு செய்யத பின்னர் எரிபொருள் வழங்கப்பட்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment