சதொச விற்பனை நிலையங்கள் பொருட்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன பொருள் வாங்க வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மட்டக்களப்பு உட்பட கிழக்கு மாகாணத்திலுள்ள சதொச விற்பனை நிலையங்கள் பொருட்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால் அந்நிலையத்தை நாடி பொருள்கள் வாங்க வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதைக் காண முடிகின்றது.சதொச விற்பனை நிலையங்களில் கடந்த சில நாட்களாக கையிருப்பில் உள்ள பொருள்கள் விற்றுத் தீர்ந்து கொண்டே வந்து கொண்டிருந்த நிலையில் இப்பொழுது பல சதொச விற்பனை நிலையங்கள் பொருள்கள் இல்லாதுவெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தங்களுக்கு சதொச தலைமைக் களஞ்சியசாலைகளிலிருந்து நீண்ட நாட்களாக பொருள்கள் வந்து சேரவில்லை என சதொச விற்பனை நிலைய அலுவலர்கள் தெரிவிக்கின்னறர்.
ஏற்கெனவே சதொச விற்பனை நியைலங்களில் சீனி மற்றும் அரிசியை தனியே வாங்க முடியாத கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அதனால் அத்தியாவசியமாக தமக்கு சீனியையும் அரிசியையும் வாங்க வரும் மக்கள் அரிசிக்கும் சீனிக்குமாகச் சேர்த்து தமக்கு அத்தியாவசியமில்லாத பொருள்களையும் வாங்க வேண்டி வந்ததால் சதொச வில் இருந்த ஏனைய பொருள்களும் விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கூறப்படுகின்றது.
மக்கள் இப்பொழுது பொருள்களை வாங்க முடியாது நிர்க்கதி நிலையை அடைந்துள்ளார்கள். தனியார் கடைகளிலும் கூட்டுறவுக் கடைகளிலும் இப்பொழுது பழுப்பு நிற சீனி ஒரு கிலோகிராம் 300 ரூபாவாகவும் வெள்ளைச் சீனி 320 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. மட்டக்களப்பு ஏறாவூர் சதொச விற்பனை நிலையத்தில் பொருள்கள் இன்றி அலுமாரிகள் வெற்றிடமாக இருப்பதைப் படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment