8 Jun 2022

கிழக்கில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் மனிதாபிமானப் பணி

SHARE

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

கிழக்கில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் மனிதாபிமானப் பணி

திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் ஜாயா நகர் -224 ஜீ கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கபீர் முஹம்மட் இப்றாஹீம் என்பவர் அண்மையில் மூதூரில் சமையல் எரிவாய்வை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

மூன்று சிறு பிள்ளைகளின் தந்தையான  மர்{ஹம் இப்ராஹிமின் இழப்பு அவரின் தற்போதய குடும்ப நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால்  பல்வேறு மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வரும் தியாகி அறக்கொடை நிறுவனம் மர்{ஹம் இப்ராஹிமின் குடும்பத்திற்கும் உதவ முன்வந்தது.

இதற்கமைவாக இன ஐக்கியத்திற்கும் சமூக நலனுக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மர்{ஹம் கபீர் முஹம்மட் இப்றாஹீம் அவர்களின் குடும்ப மற்றும் பிள்ளைகளின் பராமரிப்பு  செலவுக்காக( 5 )ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை அந் நிறுவணத்தின் கிழக்கு மாகாண  இணைப்பாளர் எம்.எல்.எம்.என்நைறூஸ் தலைமையில்  வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக்,மூதூர் அனைத்துப்பள்ளிவாயல் தலைவர் சாஹ_ல் கமீது தஸ்ரிக் (மௌலவிமூதூர் இளைஞர் சேவை அதிகாரி .எம்.றிஸ்விஇன ஐக்கியத்திற்கும் சமூக நலனுக்குமான அமைப்பின் தலைவர்

தாவூத் முகம்மது உமர் அறபாத் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


.







SHARE

Author: verified_user

0 Comments: