கலைஞர்கள் நிதியை நோக்கிப் பயணிப்பவர்கள் அல்லை சமூகம் சார்ந்து அவர்களது கலைப்படைப்புக்களை வெளியிடுகின்றார்கள் -அரச அதிபர்.
கலைஞர்கள் நிதியை நோக்கிப் பயணிப்பவர்கள் அல்லை அவர்கள் சமூகம் சார்ந்து அவர்களது கலைப்படைப்புக்களை வெளியிடுகின்றார்கள். இவ்வாறுதான் கலைஞர்களின் செயற்பாடுகள் வரலாற்றுப் போக்கில் இடம்பெற்று வருகின்றன. தற்போது மாறி வருகின்ற பொருளாதார சமூக மாற்றத்தின்கு ஏற்ப கலைஞர்களும், பொருளாதார ரீதியில் வளம் பெறவேண்டும் அவர்களும் நம்பிக்கையுடன் வழம்பெறவேண்டும் என்ற சிந்தனைக்கு ஏற்ப அரசாங்க ஊழியர்கள் எவ்வாறு ஓய்வூதியம் பெறுகின்றார்களோ கலைஞர்களும் 60 வயதைக் கடந்ததும் ஓய்வூதியம் பெறுவதற்குரிய வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருனாகரன் தெரிவித்துள்ளார். இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் வழங்கப்படும் காப்புறுதி, மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கான ஆவணங்களைக் கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை(31) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போத கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
அரச ஊழியர்கள் எவ்வாறு நோய்வாய்ப்படும் வேளையில் காப்புறுதிகளைப் பெறுகின்றார்களோ அவ்வாறே கலைஞர்களும், காப்புறுதிகளைப் பெற்றுக் கொள்ளும் வசதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவை கலைஞர்களுக்கு கிடைக்கும் எதிர்பாராத அதிஸ்ட்டங்களாகும். கலைஞர்களின் கலைப் படைப்புக்களுக்கு பாராட்டுக்களும், கைத்தட்டல்களும் கிடைக்கப்பெறும், இந்நிலையில் கலைஞர்களை நம்பியிருக்கின்ற குடும்பம் பிற்காலத்தில் வாழ்வதற்குரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இது கலைஞர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும்.
எதிர்காலத்தில் நாம் பாரிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளக் காத்திருக்கின்றோம். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாக 5 கலைஞர்கள் ஓய்வூதியத் திட்டத்திலும், 13 கலைஞர்கள், அவர்களுக்கான காப்புறுதித்திட்டத்தின் கீழும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். எதிர்காலத்தில் மேலும் இளம் கலைஞர்களை உள்வாங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன. என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், மற்றும் கiலாசார உத்தியோகஸ்த்தர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment