26 Apr 2022

மட்டு—கல்முனை பிரதான வீதியில் கெண்டைனர் மோதி 30 வருட பமைமைவாய்ந்த பாரிய மரம் விழுந்து போக்குவரத்து பரிதிப்பு—மின்சாரமும் தடை

SHARE

மட்டு—கல்முனை பிரதான வீதியில் கெண்டைனர் மோதி 30 வருட பமைமைவாய்ந்த பாரிய மரம் விழுந்து போக்குவரத்து பரிதிப்பு—மின்சாரமும் தடை.

பாரிய மரம் மீது கெண்டைனர் மோதியதில் மரம் நடுவீதியில் விழுந்து இரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா சந்தியில் திங்கள்கிழமை (25) காலை சம்பவம் இடம் பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து மரத்தை அறுத்து வீதிப்போக்குவரத்தை சீர் செய்தனர்.
குறித்த பிரதேசத்தில் மரம் விழுந்து மின்கம்பங்கள் அறுந்து விழுந்தமையால் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வருடங்கள் பழைமை வாய்ந்த இம்மரம் பிரதேசத்தின் அடையாளமாகக் காணப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: