18 Mar 2022

கரையோர வளங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம்

SHARE

கரையோர வளங்களை பாதுகாக்கும்  வேலைத்திட்டம்.

சுற்றுசூழல் பாதுகாப்பு  தேசிய வேலைத்திட்டத்திற்கு  அமைய அரசசார்பற்ற  நிறுவனமான கரித்தாஸ் எகெட் நிறுவனத்தினால்  முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  கரையோர வளங்களை பாதுகாக்கும்  வேலைத்திட்டத்திற்கு அமைய   செடெக்  நிறுவனத்துடன் இணைந்து   கண்டல்  தாவரம்  நடுகை திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன  .

அந்தவகையில் மட்டக்களப்பு  லயிட் ஹவுஸ்  சூழல் பாதுகாப்பு விழிப்பு குழு தலைவர்   வி .கே .முத்துலிங்கம்  ஆலோசனையுடன் கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர்  அருட்பணி  எ .ஜேசுதாசன் தலைமையில்  பாலமீன்மடு ,திராய் மடு மீனவ சங்கம் மற்றும் கிராம அபிவிருத்தி குழுவுடன் இணைந்து  மக்கள் தொடர்பாடல் பொலிஸாரின் பங்களிப்புடன்  பாலமீன்மடு ,திராய் மடு  கிராம சேவையாளர்  பிரிவுக்குட்பட்ட   வாவிக்கரை  பகுதியில் கண்டல்  தாவரம் நடுகை நிகழ்வு வியாழக்கிழமை (17) நடைபெற்றது .

இந்நிகழ்வில்  கொக்குவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி  எஸ் ஐ . பிரதீப் , கரித்தாஸ் எகெட்  நிகழ்ச்சி திட்ட  இணைப்பாளர் எஸ் .பெற்றிக் , செடெக்  நிறுவன கிழக்கு பிராந்திய இணைஇணைப்பாளர் எஸ் சோபாஞ்சனி ,கரித்தாஸ் எகெட் 


















நிறுவன வெளிக்கள உத்தியோகத்தர்களான எம் .றொபின்சன்  , ஆர். அகிலேஷ் மக்கள் தொடர்பாடல்  பிரிவு பொலிஸ்  உத்தியோகத்தர்  அன்புராஜ் , பாலமீன்மடு ,திராய் மடு   மீனவ சங்கம் மற்றும் கிராம அபிவிருத்தி  குழு உறுப்பினர்கள் லயிட் ஹவுஸ்  சூழல் பாதுகாப்பு விழிப்பு குழு இளைஞர் யுவதிகள்   கலந்துகொண்டு கண்டல்  தாவரங்களை  நட்டு வைத்தனர்.


           

SHARE

Author: verified_user

0 Comments: