கச்சேரிக்கோட்டை கட்டுவதற்கு 600 தேன்குடம் வழங்கிய சித்தாண்டிக்குடி- மரபுவழியாக மீண்டும் புதிய கச்சேரி ஆலயத்திற்கு நிதிவழங்கிய வன்னிமை மற்றும் வண்ணக்கார்.
வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஸ்ரீ சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில் வன்னிமை மற்றும் வண்ணக்குமார் மட்டக்களப்பு மாவட்ட திராய்மடு புதிய கச்சேரியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் திருப்பணி நற்காரியத்திற்கான நிதியுதவி இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது.
ஸ்ரீ சித்தாண்டி சித்திர வேலாயுதர் சுவாமி கோவிலின் வன்னிமை மற்றும் வண்ணக்குமாருக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் 2022.01.03ம் திகதியில் குறித்த விடயம்தொடர்பாக கோரிக்கைவிடுத்தமைக்கு அமைய இன்றைய தினம் ஆலயத்தின் வன்னிமை மற்றும் வண்ணக்குமார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் யு.நவேஸ்வரன் மற்றும் மாவட்ட காலாசார உத்தியோகத்தர் மு.குணநாயகம் ஆகியோரிடம் ஆலயத்தின் திருப்பணி நிறைவுற ரூபாய் ஒரு லட்சம் (100,000/-) ஸ்ரீ சித்தாண்டி சித்திர வேலாயுதர் சுவாமி கோவிலின் நிதியிலிருந்து மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
சேர சோழ பாண்டிய மன்னனின் வழிவந்த காராளர் குலத்தவர் தணியுண்ணாப் பூபால கோத்திர வன்னியனார்கள் கௌரவ முடிசூடிய வன்னிமையான உயர் திரு.நல்லதம்பி (வன்னிமை) அவர்கள் போர்த்திக்கீசத் தளபதியான 'கொண்ரைண்டிசர்' (கி.பி 1627) பந்தாறுமூலை (வந்தாறுமூலை) சிற்றாண்டிக்குடியில் இருந்து கோட்டையொன்றைக் கட்டுவதற்கு அறுநூறு (600) குடம் தேனினை வழங்கி வைத்தனர். மூலம்: திரு கன்னங்கர அவர்களினால் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம் எனும் நூல்.
அதேவழிவந்த கௌரவ முடிசூடிய வன்னிமையான உயர் திரு.செல்லப்போடி சிவவடிவேல் பாலச்சந்திரன் வன்னிமை அவர்களினால் புதிய கச்சேரியில் அமையப்பெறவுள்ள ஆலயத்திற்கான திருப்பணி நிறைவுக்கான நற்காரியத்தை மரபுவழியில் கைகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment