23 Dec 2021

மண்முனைமேற்கு மணிபுரம் விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா.

SHARE

(ரகு)

மட் /மண்முனைமேற்கு மணிபுரம் விக்னேஷ்வரா வித்தியாலயத்தில்   அதிபர் இராசையா நடேசபதி அவர்களின் தலைமையில் ஒளிவிழா மாணவர்கள் கௌரவிப்பு மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவென முக்கிய மூன்றுநிகழ்வுகள் இணைந்ததான முப்பெரும் விழாவாக பாடசாலை வருட இறுதிகொண்டாட்டமும் இணைந்ததான நிகழ்வொன்று 2021/12/22 திகதியன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு கல்விவலய கோட்டக் கல்விப்பணிப்பாளர்   சுப்பிரமணியம் முருகேசபிள்ளை அவர்கள் பங்கேற்று நிகழ்வினை சிறப்பித்தார். பாடசாலையின் கல்வி அபிவிருத்தியில் முன்நின்று ஆளுமையோடு செயற்பட்ட  அதிபர்களான திருகரிகாலன் மற்றும் பேரானந்தம் ஆகிய இருவரும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரால் ஒருங்கிணைந்து வாழ்த்துப்பாமாலை வழங்கி சேவைநலன்பாராட்டப்பட்டு பூமாலை அணிவித்து கௌரவிக்கபட்டனர்.

அத்தோடு பாடசாலையில் ஆசிரியப்பணியாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற  ஆசிரியர்களான  சோதிநாதன் கார்த்தீபன் திருமதி.கலைவாணி மற்றும் திருமதி.மதி ஆகியோர் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திசங்கத்தினரால்  மாலை அணிவிக்கப்பட்டு பரிசில்கள்வழங்கி சேவைநலன் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சையில் இப்பாடசாலையில் கல்விகற்று 158மற்றும் 161புள்ளிகளைப்பெற்றுசித்திபெற்று இப்பாடசாலைக்கு பெருமைதேடித்தந்த மாணவர்கள் மற்றும் அவர்களின்பெற்றோர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் அதிபர் ஆசிரியர்களால் வெற்றிக்கிண்ணம் மற்றும் நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய முக்கிய அம்சமாக ஒளிவிழாவினை சிறப்பிக்கும் வகையில் நத்தார் தாத்தாவின் நடனம் இடம்பெற்றதோடு மாணவர்களுக்கு நத்தார் தாத்தாவினால் இனிப்புக்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.















SHARE

Author: verified_user

0 Comments: