11 Dec 2021

சமத்துவமின்மையை குறைத்தலும் மனித உரிமைகளை மேம்படுத்தலும்.

SHARE

சமத்துவமின்மையை  குறைத்தலும் மனித உரிமைகளை  மேம்படுத்தலும்.

மனித உரிமை தினத்தை  முன்னிட்டு மட்டக்களப்பிலிருந்து இயங்கும் Voice of rights அமைப்பினால் சமத்துவமின்மையை  குறைத்தலும் மனித உரிமைகளை  மேம்படுத்தலும் எனும் தொனிப் பொருளில் மனித உரிமை தின நிகழ்வும் மனித உரிமை கற்கை நெறியினை மேற்கொண்ட இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை(10) மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரன் மனித உரிமை ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அப்துல் லதீப் இஸ்ஸடீன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் .வசந்தராஜா, சட்டத்தரணி .ரமேஸ்வரி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இந்நிறுவனத்தின் தொண்டர்கள், இளைஞர் யுவதிகள், அதநோடு இணைந்து செயற்படுவோர் இணைந்து மனித உரிமை உறுப்புரைகள் அடங்கிய பதாகைகைளை ஏந்தி மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இருந்து சார்ள்ஸ் மண்டபம் வரை நடைபயணமாக சென்றனர்.

பின்னர் சார்ள்ஸ் மண்டபத்தில் மனித உரிமைகள் நிகழ்வும் அத்துடன் அந் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட மனித உரிமைகள் கற்கை நெறியில் சித்திபெற்ற இளைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.













 

SHARE

Author: verified_user

0 Comments: